வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

31.08.2012 

ஈழத்தின் சின்னக்கதிர்காமமாம் மண்டூர்த் தீர்த்த உற்சவம் (படங்கள் இணைப்பு)


இலங்கையில் வரலாற்று பிரசித்திபெற்றதும் ஈழத்து சின்னக்கதிர்காமம் எனவும் போற்றப்படும் மட்டக்களப்பு - மண்டூர் - ஸ்ரீகந்தசுவாமி ஆலய தீர்த்த உற்சவம் இன்று (31) கோலாகலமாக இடம்பெற்றது. கடந்த 10 தினங்களாக ஆலயத்தின் உற்சவம் பண்டைய முறையிலான வழிபாட்டு முறைகளுடன் இடம்பெற்றுவந்து. 

கந்தபுராண கால வரலாற்றுடன் தொடர்புபட்ட ஆலயமாகவுள்ள இந்த ஆலயத்தின் வரலாறுகள் கூறுகின்றன. சூரபத்மனை சங்காரம் செய்வதற்கு முருகன் ஏவிய வேல் ஆறு பகுதியாக பிரிந்து சூரனை வதம் செய்த பின்னர் இலங்கையில் கதிர்காமப்பகுதியிலும் மண்டூர் பகுதியிலும் இருவேல்கள் தங்கியதாக அந்த வரலாறுகளில்    
இலங்கையில்  வரலாற்று  பிரசித்திபெற்றதும்  ஈழத்து  சின்னக்கதிர்காமம் எனவும்  போற்றப்படும் மட்டக்களப்பு.மண்டூர்  ஸ்ரீகந்தசுவாமி  ஆலய  தீர்த்த உற்சவம்  இன்று  கோலகலமாக இடம்பெற்றது.
  கடந்த 10 தினங்களாக  ஆலயத்தின்  உற்சவம்  பண்டைய  முறையிலான  வழிபாட்டு  முறைகளுடன்  இடம்பெற்று  வந்து .
கந்த புராண  கால  வரலாற்றுடன்  தொடர்புபட்ட ஆலயமாகவுள்ள  இந்த  ஆலயத்தின்  வரலாறுகள்  கூறுகின்றன 
சூரபத்மனை  சங்காரம்  செய்வதற்கு   முருகன்  ஏவிய  வேல்  ஆறு  பகுதியாக  பிரிந்து சூரனை  வதம்  செய்த  பின்னர்  இலங்கையில்  கதிர்காமப்பகுதியிலும் மண்டூர்  பகுதியிலும்  இருவேல்கள்  தங்கியதாக  அந்த  வரலாறுகளில்  தெரிவிக்கப்படுகின்றன .
கதிர்காமத்தின்  வரலாற்றுடன்  மட்டுமன்றி  இங்குஇடம்பெறும்பூசை  முறைகளும்  பண்டைய  முறையில்  கதிர்காமத்தினை  ஒத்ததாகவே  காணப்படுகின்றன .
தங்கவேல்  கொண்டுள்ள  பேழை  அலங்கரிக்கப்பட்டு  அதற்கு  தினமும்  பூசைகள் இடம்பெற்றதுடன்  ஆலய  உள் வீதி  வெளி  வீதியுலா  இடம்பெற்றதுடன்  
வள்ளியம்மன்  தெய்வானையம்மன்  ஆலயங்களுக்கும்  பேழை  கொண்டுசெல்லப்பட்டு  பூசைகளும்  இடம்பெற்றுவந்தன .
இன்று  காலை  ஆலயத்தில்  கப்புகனாரால்  பேழைக்கு  விசேட  பூசைகள்  செய்யப்பட்டு   சுவாமி  உள் வீதி  வலம்  வந்து  கிராமத்தின்  ஊடாக  மட்டக்களப்பு  வாவியினை  அடைந்து  அங்கு  சிறப்பு  பூசைகள்  செய்யப்பட்டன.
இந்த  தீர்த்த  உற்சவத்தினை  கண்டுகளிப்பதற்காக  உலகம்  எல்லாம்  இருந்து  பல்லாயிரக்கணக்கானோர்  கலந்து கொண்டதுடன்  சிங்கள  மக்களும்  அதிகளவில்  கலந்துகொண்டனர்.
இந்த உற்சவத்தினை  முன்னிட்டு  வெல்லாவெளி  போலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி  வேலகேதரவின்  தலைமையில்  விசேட  பாதுகாப்புக்கள்  செய்யப்பட்டிருந்ததுடன்  மட்டக்களப்பு  மாவட்டத்தின்  பல்வேறு  பகுதிகளுக்கு  இலங்கை  போக்குவரத்து  சேவை  பஸ்கள்  சேவையில்  ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
இந்த  உற்சவத்தினை  சிறப்பிக்கும்  வகையில்  வசந்தம்  எப்.எம்  இதற்கு  முதன் முறையாக  ஊடக  அனுசரணை  வழங்கியிருந்தமை  சிறப்பம்சமாகும்