மண்டூர் உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஞாயிறு, அக்டோபர் 14, 2012

AddThis - Share Button, Social Bookmark, Sharing Plugins and Analytics

AddThis - Share Button, Social Bookmark, Sharing Plugins and Analytics
இடுகையிட்டது Unknown நேரம் 10:35 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

!♥♥ காதல்♥♥!

!♥♥ காதல்♥♥!
இடுகையிட்டது Unknown நேரம் 10:22 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துகள் (Atom)

பொது அறிவு

01.மதுரை மீனாச்சி அம்மன் கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் எதனை தூண்கள் உள்ளன ?
(985)

02.மதுரையில் மகாகவி பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய பள்ளியின் பெயர் என்ன ?
(சேதுபதி உயர் நிலை பள்ளி )

03. தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ சின்னத்தை வரைந்து கொடுத்த மதுரை ஓவியர் யார் தெரியுமா (ஓவியர் நடராசன் )

04.மதுரை மீனாட்சியம்மன் கோவில் நுழைவு கோபுரங்களுள் உயரமானது எது ?
(தெற்கு கோபுரம் )
Powered By Blogger

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

  • (தலைப்பு இல்லை)
    Mandur Murugan Kovil Batticaloa, Sri Lanka
  • (தலைப்பு இல்லை)
    மண்டூர்  மாரிஅம்மன்  கோவில்  முன்பாக  இவர்கள்   இருவரும்  அமைதியாக  என்னத்த  ஜோசிக்ராங்களோ  தெரியல்ல 
  • (தலைப்பு இல்லை)
    மண்டூர்  முருகன்  கோவில் முன்பாக
  • (தலைப்பு இல்லை)
  • (தலைப்பு இல்லை)
    31.08.2012  ஈழத்தின் சின்னக்கதிர்காமமாம் மண்டூர்த் தீர்த்த உற்சவம்  (படங்கள் இணைப்பு) இலங்கையில் வரலாற்று பிரசித்திபெற்றதும் ஈழத்து சி...
  • (தலைப்பு இல்லை)
    மண்டூர்  அருள்  மணி  விளையாட்டுக்கழகம் முதலாவது  கிண்ணத்தை  கைப்பற்றியது  ...
  • (தலைப்பு இல்லை)
    முருகன்  ஆலய   தீர்த்த  உற்சவத்தின்  போது எடுக்கப்பட்ட  படம்   முருகன்  ஆலய   தீர்த்த  உற்சவத்தின்  போது  எடுக்கப்பட்ட  படம்   ...
  • (தலைப்பு இல்லை)
     மண்டூர் பாதை  2010 மண்டூர்  கறுத்தப்பாலம் உடைந்த  பின்   2010 மண்டூர்  பூமாவடி ப்பாலம்      உடைந்த  பின்   மண்டூர...
  • (தலைப்பு இல்லை)
    ...
  • (தலைப்பு இல்லை)
    மண்டூர்  மாரி அம்மன்  கோவில்   மண்டூர்  மாரி  அம்மன்  கோவில்   கணேஷ்  குருக்கள்   மண்டூர்  முருகன்  கோவில்  உற்சவத்தின்   ...

மொத்தப் பக்கக்காட்சிகள்

எனது வலைப்பதிவு பட்டியல்

மனிதனில் எத்தனை எலும்புகள் உள்ளன

சூப்பர் சிங்கர் ஜூனியர் யாருக்கு கிடைக்கும்

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2012 (29)
    • ►  ஆகஸ்ட் (16)
    • ►  செப்டம்பர் (11)
    • ▼  அக்டோபர் (2)
      • !♥♥ காதல்♥♥!
      • AddThis - Share Button, Social Bookmark, Sharing P...
Powered By Blogger

31.08.2012 ஈழத்தின் சின்னக்கதிர்காமமாம் மண்டூர்த் தீர்த்த உற்சவம் (படங்கள் இணைப்பு) இலங்கையில் வரலாற்று பிரசித்திபெற்றதும் ஈழத்து சின்னக்கதிர்காமம் எனவும் போற்றப்படும் மட்டக்களப்பு - மண்டூர் - ஸ்ரீகந்தசுவாமி ஆலய தீர்த்த உற்சவம் இன்று (31) கோலாகலமாக இடம்பெற்றது. கடந்த 10 தினங்களாக ஆலயத்தின் உற்சவம் பண்டைய முறையிலான வழிபாட்டு முறைகளுடன் இடம்பெற்றுவந்து. கந்தபுராண கால வரலாற்றுடன் தொடர்புபட்ட ஆலயமாகவுள்ள இந்த ஆலயத்தின் வரலாறுகள் கூறுகின்றன. சூரபத்மனை சங்காரம் செய்வதற்கு முருகன் ஏவிய வேல் ஆறு பகுதியாக பிரிந்து சூரனை வதம் செய்த பின்னர் இலங்கையில் கதிர்காமப்பகுதியிலும் மண்டூர் பகுதியிலும் இருவேல்கள் தங்கியதாக அந்த வரலாறுகளில் இலங்கையில் வரலாற்று பிரசித்திபெற்றதும் ஈழத்து சின்னக்கதிர்காமம் எனவும் போற்றப்படும் மட்டக்களப்பு.மண்டூர் ஸ்ரீகந்தசுவாமி ஆலய தீர்த்த உற்சவம் இன்று கோலகலமாக இடம்பெற்றது. கடந்த 10 தினங்களாக ஆலயத்தின் உற்சவம் பண்டைய முறையிலான வழிபாட்டு முறைகளுடன் இடம்பெற்று வந்து . கந்த புராண கால வரலாற்றுடன் தொடர்புபட்ட ஆலயமாகவுள்ள இந்த ஆலயத்தின் வரலாறுகள் கூறுகின்றன சூரபத்மனை சங்காரம் செய்வதற்கு முருகன் ஏவிய வேல் ஆறு பகுதியாக பிரிந்து சூரனை வதம் செய்த பின்னர் இலங்கையில் கதிர்காமப்பகுதியிலும் மண்டூர் பகுதியிலும் இருவேல்கள் தங்கியதாக அந்த வரலாறுகளில் தெரிவிக்கப்படுகின்றன . கதிர்காமத்தின் வரலாற்றுடன் மட்டுமன்றி இங்குஇடம்பெறும்பூசை முறைகளும் பண்டைய முறையில் கதிர்காமத்தினை ஒத்ததாகவே காணப்படுகின்றன . தங்கவேல் கொண்டுள்ள பேழை அலங்கரிக்கப்பட்டு அதற்கு தினமும் பூசைகள் இடம்பெற்றதுடன் ஆலய உள் வீதி வெளி வீதியுலா இடம்பெற்றதுடன் வள்ளியம்மன் தெய்வானையம்மன் ஆலயங்களுக்கும் பேழை கொண்டுசெல்லப்பட்டு பூசைகளும் இடம்பெற்றுவந்தன . இன்று காலை ஆலயத்தில் கப்புகனாரால் பேழைக்கு விசேட பூசைகள் செய்யப்பட்டு சுவாமி உள் வீதி வலம் வந்து கிராமத்தின் ஊடாக மட்டக்களப்பு வாவியினை அடைந்து அங்கு சிறப்பு பூசைகள் செய்யப்பட்டன. இந்த தீர்த்த உற்சவத்தினை கண்டுகளிப்பதற்காக உலகம் எல்லாம் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதுடன் சிங்கள மக்களும் அதிகளவில் கலந்துகொண்டனர். இந்த உற்சவத்தினை முன்னிட்டு வெல்லாவெளி போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேலகேதரவின் தலைமையில் விசேட பாதுகாப்புக்கள் செய்யப்பட்டிருந்ததுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இலங்கை போக்குவரத்து சேவை பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

mandur

  • mandur

mandur

mandur
மண்டூர் கந்தசுவாமி ஆலயம் ......... ....மண்டூர் தில்லையிலே வந்துதித்த தங்க வேலே ..... மட்டக்களப்பு நகரின் தெற்கே சுமார் 30 கிலோமீற்றர் தூரத்தில் இயற்கை அழகு செறிந்த மண்டூர் கிராமம் அமைந்துள்ளது தில்லை மரங்கள் அடர்ந்த காட்டில் இளந்தென்றல் மெய்லென வீசும் அமைதியான சூழலிலே தானாக அடியார்களுக்கு அருள் பாலிப்பதற்காக வந்துதித்த ஒளி வீசும் வேலாயுதமாகும் அதாவது முருகப் பெருமானார் சூரபத்மனைத் சங்கரித்த வேலாயுதத்தில் இருந்து பிறந்த மூன்று ஒளிப் பிளம்புகளில் ஒன்று உகந்த மலையிலும் இன்னொன்று திருக்கோவில் வெள்ளைநாவல் மரமொன்றிலும் மற்றையது மண்டூரில் தில்லை மரத்திலும் வேல்களாக உதித்து காட்சி கொடுத்தன என்பது கர்ண பரம்பரையின் கதீகக் கதை மட்டுமல்லாது இவ்வாலயத்தின் ஆரம்ப காலம் முதல் இன்றுவரை எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். இவ்வாலயம் காலத்தினால் முற்பட்ட மிகத் தொன்மை வாய்ந்ததொன்றாகும் தில்லை மரத்தில் இறையருளால் உதித்த வேலினை நேரில் கண்டு அகமகிழ்ந்த மண்டூரில் ஆதிவாசிகளான வேடுவர்கள். இவர்கள் கட்டாக் குளம் சுணையனகல் பகுதிகளில் அக்காலப்பகுதிகளில் வாழ்ந்தனர் இவர்களே மிக நீண்டகாலத்திற்கு கொத்துப்பந்தல் அமைத்து வழிபட்டு வந்தனர் அவர்களின் வழி வந்தோரே மண்டூரின் சொந்தக் குடிகளாக ஆலயத்தின் முக்கிய பாகங்களாகவும் இன்றும் வாழ்கின்றனர் பிற்காலத்தில் வாவியில் மீன்பிடித்து இளைப்பாறுவதற்கு கரை சேர்ந்த அயல் கிராமங்களைச் சேர்ந்த கரையார் குலத்தை சேர்ந்த சிலரும் இவ் வேலின் மகிமையையறிந்து வழிபட்டதாகக் ஜதீகம் அக்காலப்பகுதியில் மட்டக்களப்பின் கிழக்குப் பகுதிகளில் முக்குவன்னியமைகளின் அங்கீகாரமும் அதிகாரமும் பெற்றுக் கொள்ளுதல் போதுத்தலங்களுக்கேல்லாம் நியதியும் சிறப்புமாக இருந்தன அதனடிப்படையில் தேசத் தலைவரான வன்னிமையின் தலைமையில் கொயிலமைப்பும் நிர்வாகமும் ஒழுங்குகளும் வகுக்கப் பெற்றன சிறப்பாக மட்டக்களப்பு பகுதியில் முருகன் கோயில்கள் திருப்படைக் கோயில்கள் என்றும் அழைக்கப்பட்டன அதற்கமைய குடிவழிப்படியே அங்கு வாழ்ந்த மக்களின் தகுதியடிப்படையில் ஆலயத் திருப்பணிகள் வகுத்துக் கொடுக்கப்பட்டன சமுகத்தில் ஏற்றத் தாழ்வு கற்பித்ததாகவல்ல. இதற்கமைய மண்டூர் முரகன் ஆலய தலைவராக வண்ணக்கர் இருப்பார் இவர் இவ்வாலயத்தினை சிறப்பித்து பெரும் பங்களிப்பு கொண்ட நிர்வாகியாகவும் பிரதாநியாகவும் இக்கிராம மக்களினுடைய உயர்வுக்கு முதன்மைப்படுத்தபடுபவருமாக இருப்பார் ஆலயம் சார்ந்த அனைத்து நிர்வாக நடவடிக்கைகளிலும் முழுப் போருப்புடியவராக இருப்பதுடன். இதற்கு மண்டூர் வேளாரும் பங்கேற்றுச் செயல்படுவார் மேலும் கோவிலின் உட்கடமைகள் செய்வதற்கு கொவிலாரும் பூசை செய்யும் பொறுப்புக்களுக்கு கப்புக குடியினரும் நியமிக்கப்பட்டனர் அங்கு வாழ்ந்த சமூகங்களின் தகுதியடிப்படையில் திருவிழாக்கள் செய்வதும் முன்னுரிமைப்படுத்தி வழங்கப்பட்டன பிற்காலத்தில் தில்லை மண்டூர் முருகன் அருளால் வளத்தினால் நிலவளமும் பொருள் வளமும் கோயிலை நோக்கி சுரக்கவே கோயிற் சொத்துக்களின் வரவு செலவுகளை பதிவு செய்வதற்காக நான்கு ஊரை சாந்த நான்கு கணக்குப்பிள்ளை நியமனமானது. தேசத்து வன்னிமைகளால் திட்டமிடப்பெர்றது குருமண்வெளி கோட்டைக்கல்லாறு பெரியகல்லாறு துறைநீலாவணை இவர்கள் ஆரம்ப காலத்திலிருந்து ஆலய வெளிமுகப்பு பகுதியில் இருந்து தமது கடமையை செய்வார் . வண்ணக்கராக தெரிவு செய்யப்படுபவர் கலிங்க வெளாளராவர். இவரை மண்டூர் வெளாளர் சமூகத்தினரே தேர்ந்தெடுக்கும் உரிமை உடையவர்க்களுமாவர் மண்டூர்ப் பகுதியினை மண்டுநாகன் என்ற சிற்றரசன் கட்டுவித்தான் (கி .பி 1107 )? இவ்வாலயம் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் இவ்வாலயத்திற்கும் கதிர்காமத்திற்கும் மிக நெருக்கமான தொடர்பு இருப்பதனாலாகும் பூசை வழிபாடு முதலிய பல்வேறு வழிகளிலும் ஒற்றுமையுண்டு இதனாலேயே சின்னக்கதிர்காமம் எனவும் அழைக்கபடுகின்றது இவ்வாலயத்தின் வருடாந்த உர்ட்சவமானது ஆவணி மாதப் பூரனையிலன்று தீர்த்த உற்சவம் அதற்கு முன்னர் உள்ள இருபது நாட்களும் திருவிழாக்களும் நடைபெறுகின்றன கோடி ஏற்றமானது (ஆடிப் பூரணையின் பின் பத்தாம் நாள் நடைபெறும் இதற்கு முன்பு தேசத்து வன்னிமை தலைமயில் ஒரு மகா சபை கூட்டம் நடைபெறும் அக் கூட்டத்தில் வண்ணக்கர் கப்புகனார் கங்காணி கவுடாக்காரர் கொவிலார் கணக்குப்பிள்ளை அயலுரவர் பொதுமக்கள் கூடியிருப்பர் ஆலய கோடியேற்றத்திக்கு திருவிழா நடத்துவதற்கு தடைப்பிசகு ஏதும் இல்லை என ஏகமானதாக தீர்மானம் எடுக்கப்படும் தடை பிசகுகள் இருப்பின் அவை கலந்துரையாடி தீர்த்து கொள்ளப்படும் இது நிலையான கொடிமரம் இல்லாத மடாலய வகையைச் சேர்ந்த கோயிலாகும் . கோயிற் திருவிழா நாட்க்களில் நாள்தோறும் 5 ந் திருவிழா தொடக்கம் மாலை வேளையில் உரியோர் சங்குகளை ஊதிக்கொண்டு மண்டூர் வேளாளர் சுவாமியை தூக்கி வீதி வலம் வருதல் நியதியாகும் சுவாமி வீதி உலா வருகையில் வண்ணக்கர் தலைமையில் கட்டாடி சிலை ஒன்று ஏந்திப் பிடித்தவாறு பின்னடையாய் நடந்து வருதலும் வேடச்சாதியரில் ஒருவர் வில்லம்பு கொண்டு இருபக்கமும் பார்த்தவாறும் வேளாள சமுக ஆண்கள் சுவாமியின் அருகால் வழிநடத்தி வழிபட்டுச் செல்வதும் ஒரு பாரம்பரிய நிகழ்வாகும் தீர்த்தர்திருவிழா கடலோடு இணைந்த மட்டக்களப்பு வாவியில் மூங்கிலாறு சங்கமிக்கும் சாகர சங்கமத்தில் நடைபெறும் சுவாமி தீர்த்தமாடும் இடத்தினை பராமரித்து அழகு படுத்தும் பொறுப்பும் மண்டூர் வேளாளர் சமுகத்தின் கடமையாகும் இவ்விடத்திலுள்ள இளைப்பாறும் சபாமண்டபத்தினுள் கப்புகமார் கோவிலூர் மண்டூர் வேளாளர் தவிர்ந்த ஏனையோர் செல்லுதல் கூடாது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட பண்டைய வழக்கமாகும் இவ்வாறான பல தனிப்பட்ட வழக்கங்களும் சிறப்பியல்பாகும் மரபுகளும் இன்றுவரை தில்லை மண்டூர் முருகன் தலத்தில் உள்ளன . இவ்வாறாக நோக்குமிடத்து பாரம்பரிய வலிபாட்டுரிகளாலும் மரபுகளாலும் மண்டூர் பழம்பதி மட்டக்களப்பு ஈழத் தீவுக்கும் பெருமை செப்பதனை நாமும் பெருமையாகிக்கொள்ளலாம் மட்டக்களப்பு தமிழகத்தில் இந்துப் பண்பாடு - 2வது உலக இந்து மாநாடு மட்டக்களப்பு பிரதேச கிளை வெளியீடு வி.சீ.கந்தையா - மட்டக்களப்பு தமிழகம் சைவநெறி தரம் - (கல்வி வெளியீட்டு திணைக்களம் ) செய்தி-மண்டூர் -கோவி

Translate

இயற்கை வழம் நிறைந்த அழகிய மண்டூர்

எனது முழு சுயவிவரத்தைக் காண்க

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்
அனைவருக்கும் வணக்கம். பயணம் தீம். Blogger இயக்குவது.